அக்கரைப்பற்றில் பகலில் அரங்கேறிய சம்பவம்; தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அம்பாறை- அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (26) பட்டப்பகலில் 14 பவுண் மதிக்கத்தக்க தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலிசார் தீவிர விசாரணை
வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதேநேரம் வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்றுள்ளதை அவதானித்து அயலவர்களின் உதவியை கோரியுள்ளார்.
ஆயினும் வீட்டின் அலுமாரியில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வீட்டின் உரிமையாளர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.