குட் பேட் அக்லி ; 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து!
குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கொன்றில் நடிகர் அஜித் குமாரின் 200 அடி உயரமான கட் அவுட் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
200 அடி உயரமான கட் அவுட்
இந் நிலையில், நெல்லையிலுள்ள திரையரங்கொன்றில் வைக்கப்பட்ட 200 அடி உயரமான கட் அவுட் ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. குறித்த கட் அவுட் முறையாக வைக்கப்படாமையே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதன்போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட் அவுட் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந் நிலையில் , கட்அவுட் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்றும் இதனால் உயிர் பலி ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.