இஸ்ரேலுடனான சேவைகளை துண்டிக்கும் விமான நிறுவனங்கள்
இஸ்ரேலின் டெல் அவீவ் (Tel Aviv) நகரத்துக்குச் செல்லும் விமானச் சேவைகளைத் தற்காலிகமாய் ரத்து செய்திருப்பதாகச் சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல்மீது நடத்தப்படும் தாக்குதலையொட்டி அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக United Airlines, Delta Air Lines, American Airlines, Air France ஆகிய நிறுவனங்கள் கூறின.
விமானச் சேவைகளில் சில மாற்றங்கள்
அத்துடன் அங்குள்ள நிலைமை சீராவதற்குக் காத்திருப்பதாய் அவை தெரிவித்தன. நியூயார்க், சிக்காகோ, வாஷிங்டன், மயாமி ஆகிய இடங்களிலிருந்து நேரடியாக இஸ்ரேலுக்கு அவை விமானச் சேவைகளை வழங்குகின்றன.
அதேவேளை ஏற்கெனவே அங்கு American Airlines, Air France, Lufthansa, Emirates, Ryanair, Aegean Airlines உள்ளிட்ட நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில் அங்குள்ள நிலைமையைக் கண்காணித்துவருவதாக தெரிவித்த அதிகாரிகள், திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.