யாழிற்கு விமான சேவையை ஆரம்பிக்கும் பிரபல நிறுவனம்!
எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம் முதல் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது.
எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ ( Priyanka Fernando) அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.
எயார் இந்தியா விமான சேவையின் குறித்த விமானத்தில் 75 முதல் 90 ஆசனங்கள் வரை இருக்கும்.
இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவது இதன் நோக்கம் எனவும் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை அதிகாரிகள் உத்தேசித்திருந்தனர்.