ஏர் இந்தியா விமானத்தில் உணவில் தலைமுடி; பயணிக்கு இழப்பீடு

Colombo Chennai Madras High Court Air India
By Sulokshi Oct 18, 2025 12:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் தலை முடி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் சுந்தர பரிபூரணம் என்ற பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானத்தில் உணவில் தலைமுடி; பயணிக்கு இழப்பீடு | Air India Compensation To Passenger Hair In Food

சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

அந்த உணவை வாங்கி சாப்பிட்ட போது அதில் தலை முடி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி சுந்தர பரிபூரணம், விமானத்தில் உள்ள ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.

பின்னர், முடி விழுந்த உணவை உட்கொண்டதன் காரணமாக அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் அவர் முறைப்பாடு செய்த போதும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஏர் இந்தியா விமானத்தில் உணவில் தலைமுடி; பயணிக்கு இழப்பீடு | Air India Compensation To Passenger Hair In Food

இதனையடுத்து , சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் பயணி சுந்தர பரிபூரணம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி. பாலாஜி முன் நேற்று (17) விசாரணைக்கு வந்தது.

தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தீபாவளி ஸ்பெக்ஷல் பலகாரம் ; தலை சுற்றவைக்கும் விலை!

தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தீபாவளி ஸ்பெக்ஷல் பலகாரம் ; தலை சுற்றவைக்கும் விலை!

அப்போது, ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் முடி இருந்ததை ஒத்துக் கொண்டது. சுகாதாரம் இல்லாமல் உணவு இருந்ததற்காக வருந்துவதாகவும், விமானத்தில் வழங்கப்பட்ட உணவு சென்னை அம்பாசிட்டர் பல்லவா ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட உணவு என்றும், எனவே, அந்த நிறுவனத்தையும் வழக்கில் சேர்க்க வேண்டும், சுகாதாரமற்ற வகையில் உணவு இருந்ததற்கு விமான நிறுவனம் மட்டும் பொறுப்பில்லை என வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி , ஏர் இந்தியா விமான நிறுவனம் அலட்சியமாக இருந்துள்ளது தெளிவாகிறது. தனது பொறுப்பை உணவு நிறுவனத்திற்கு மாற்ற முயற்சித்துள்ளது.

எனவே, விமான நிறுவனத்தின் சேவையால் பாதிக்கப்பட்ட பயணி சுந்தர பரிபூரணத்துக்கு 35 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US