AI மோசடி ; குமார் சங்கக்கார எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான மோசடி குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான குமார் சங்கக்கார சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக் கொண்ட போலி விளம்பரங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதாக சங்கக்கார கூறினார்.
இந்த மோசடி விளம்பரங்களில் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், முன்னாள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர், தனது ரசிகர்களை இந்த AI-உருவாக்கப்பட்ட வீடியோக்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.