இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீம் வழக்கு தொடர்பில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
அஹ்னப் ஜஸீம் எனும் இளம் கவிஞர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28-01-2022 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இன்று (06-01-2022) புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளல் மற்றும் சாட்சி விசாரணைகளுக்கான திகதியை குறிப்பதற்காக இவ்வாறு இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 28-01-2022 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும், சாட்சி விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்திருந்தது.
இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதி ஒருவர் ஆஜரானதுடன், பிரதிவாதியான அஹ்னப் ஜஸீமுக்காக சட்டத்தரணிகளான எம். நுஹ்மான் மற்றும் ஹுஸ்னி ரஜித் ஆகியோர் ஆஜராகினர்.
அத்துடன் சுமார் 579 நாட்களின் பின்னர் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த, இவ்வழக்கின் பிரதிவாதியான அஹ்னப் ஜஸீமும் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையிலேயே வழக்கு பெப்ரவரி 28-01-2022 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.