போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை
நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிக்காத பட்சத்தில் தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை நியமித்த போதிலும் இதுவரை தமக்கான உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 2024ஆம் ஆண்டு பெரும்போகத்துக்கான நெல் அறுவடை ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளிலும் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவிய மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் விவசாயிகள் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக தாம் பாரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக மரக்கறி செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.