100 விமான தாக்குதல்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, ஈரான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்பில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
100 விமானங்களை பயன்படுத்தி தாக்குதல்
அத்துடன், தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்துள்ள இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு பிரவேசிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்கள் காலாவதியாகும் 02 அல்லது 03 நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு திரும்புமாறு தூதுவர் அறிவிக்கின்றார்.
விமானம் இரத்து செய்யப்பட்டாலும், நாளை மறுதினம் அல்லது வீசா காலாவதியாகும் முன் இஸ்ரேலுக்கு வர முடியும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல விமானங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இலங்கை செல்ல விரும்புபவர்கள் விசா பெறாமல் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் நீண்ட விடுமுறை காணப்பட்டமையே வீசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் என இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இஸ்ரேல் சுமார் 100 விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து அங்கு எழுந்த பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு ஈரானும் தனது வான்வெளியை சில மணி நேரம் மூட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.