அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆடி மாத வழிபாடு
ஆடி மாத வழிபாடு அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாகும்.
எளிய வழிபாடுகளையும் நம்பிக்கையுடன் செய்தால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.
வழக்கமாக நாம் செய்யும் பூஜை என்றாலும் அதன் அர்த்தம் புரிந்து கொண்டு ஆடி மாதத்தில் செய்வதால் நாம் நினைத்த காரியம் எதுவாக இருந்தாலும் அந்த வேண்டிதல் நிச்சயம் நிறைவேறும்.
ஆடி மாத பூஜை
ஆடி மாதம் முழுவதுமே எந்த நாளில், எந்த வழிபாட்டை செய்தாலும் அதன் பலன் பல மடங்காக நமக்கு திருப்பிக் கிடைக்கும்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆடி மாதத்தில் செய்தால் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதம் அம்மனின் சக்தி அதிகரித்திருக்கும் காலமாகும்.
இந்த மாதத்தில் அம்பிகையின் மனம் குளிரும் படி விரதமிருந்து, பூஜைகள் செய்து, வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் தேடி வரும்.
ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய் கிழமையில் வீட்டில் விளக்கு பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் உள்ள வறுமை முற்றிலுமாக நீங்கி விடும்.
குழந்தை வரம், திருமணம் வரம், பண பிரச்சனை, கடன் தொல்லை, வீடு வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், நோய் சரியாக வேண்டும் என எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் அதை அம்பிகையிடம் சொல்லி முறையிட்டு விளக்கு பூஜை செய்தால் அது உடனடியாக நிறைவேறும்.
விளக்கு பூஜை
இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது விளக்கேற்றி வழிபடுவது.
விளக்கு என்பது மங்களத்தில் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அதனால் தான் எந்த விழா ஆனாலும் எந்த ஒரு நல்ல காரியம் துவங்குவது என்றாலும் குத்துவிளக்கேற்றி வைத்து, துவங்குவது நம்முடைய மரபாக உள்ளது.
விளக்கு என்பது வீட்டில் உள்ள இருளை மட்டுமின்றி, நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருள்கள் அனைத்தையும் நீக்கக் கூடியது.
அது மட்டுமின்றி விளக்கின் சுடரில் பராசக்தி குடியிருப்பதாக ஐதீகம்.
வீட்டில் விளக்கு பூஜை செய்யும் முறை
விளக்கு பூஜையை பூஜை அறையில் தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது.
விளக்கில் அம்மனை எழுந்தருள செய்வதால் வீட்டை சுத்தம் செய்து விளக்கு பூஜை செய்யும் இடத்தை மெழுகி, மனைபலகை ஒன்றில் கோலமிட்டு வைக்க வேண்டும்.
மனை பலகை இல்லாதவர்கள் தாம்பாலம் அல்லது வாழை இலையை எடுத்துக் கொள்ளலாம்.
அதில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி, அதன் மீது விளக்கை வைக்க வேண்டும். அதை மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பிறகு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, முதலில் விநாயகரையும், பிறகு குலதெய்வத்தையும் வணங்கி விட்டு குத்து விளக்கை ஏற்ற வேண்டும்.
வீட்டில் உள்ள காமாட்சி விளக்கு, அகல் விளக்கு என எந்த விளக்கையும் வைத்து பூஜை செய்யலாம்.
அம்மனுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்களை சொல்லி குங்குமம் அல்லது பூக்கள் அல்லது அட்சதையால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அந்த விளக்கை அம்மனாக பாவித்து, ஏதாவது நைவேத்தியம் படைத்து, தூப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த விளக்கு பூஜையை ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் வீட்டில் செய்து வருவது மிக விசேஷமானது.