தக்காளிக்கு பதிலாக சமையலில் இந்த பொருட்களை சேர்த்து கொள்ளலாமா?
தினசரி சமையலில் சுவைக்காகவும், கண்ணைக் கவரும் நிறத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் தக்காளி.
தக்காளிக்கு இணையான புளிப்புச் சுவைக்கும், நிறத்திற்கும் ஒருசில மாற்று பொருட்களைப் பயன்படுத்தலாம்.
மாங்காய் தூள்
மாங்காய் தூள் நல்ல புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது மற்றும்.
இந்த மாங்காய் தூளை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி அளவு குழம்பு அல்லது வேறு சமையலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது நிச்சயம் உணவில் எதிர்பார்க்கும் புளிப்புச் சுவையைத் தரும்.
புளி
தக்காளியை விட அதிக புளிப்புச் சுவையைக் கொண்ட பொருள் தான் புளி.
புளிக்குழம்பு, சாம்பார் போன்றவற்றில் தக்காளியைப் போடாமல் புளிச்சாற்றினை மட்டும் பயன்படுத்தினாலே போதும் அந்த உணவு நன்றாக இருக்கும்.
புளிச்சாறு குழம்பிற்கு நல்ல நிறத்தை தரக்கூடியது. எனவே தக்காளிக்கு மாற்றாக புளியைப் பயன்படுத்தலாம்.
புளித்த தயிர்
தக்காளி சேர்த்து செய்யப்படும் சமையல்களில் தக்காளிக்கு மாற்றாக புளித்த தயிரை பயன்படுத்தலாம்.
தயிரை குழம்பு அல்லது கிரேவியில் சேர்க்கும் போது அந்த கிரேவி சற்று கெட்டியாவதோடு நல்ல புளிப்பு சுவையுடனும் இருக்கும்.
ஆனால் அதற்கு தயிரை சமைத்து முடித்த பின் இறுதியில் சேர்த்து கிளற வேண்டும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
ஆனால் நெல்லிக்காய் சற்று கூடுதல் புளிப்புச் சுவையைக் கொண்டது என்பதால் அதைப் பயன்படுத்தும் போது அளவில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
நெல்லிக்காயை சமையலில் பயன்படுத்துவதாக இருந்தால் அந்த நெல்லிக்காய் துண்டுகளை சர்க்கரை சேர்த்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து அதன் பின் சமையலில் சேர்க்கவும்.
வினிகர்
தக்காளிக்கு அடுத்தப்படியாக தனித்துவமான புளிப்புச் சுவையைக் கொண்ட மற்றொரு பொருள் வினிகர்.
ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குடல் தொற்று பிரச்சனைகள், வயிற்றுப் போக்கு, செரிமான பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுவிடுக்கும்.