கொழும்புத் துறைமுகத்தில் களமிறங்கும் அதானி
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் துறை கூட்டு அபிவிருத்தி முயற்சியாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கையின் பிரதான பங்காளராக இந்தியாவின் அதானி நிறுவனம் காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 5 ஆயிரம் கோடி இந்திய ரூபா பெறுமதியில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது