சிவனடி பாதமலைக்கு தரிசனம் செய்துவிட்டு தொதல் பொதி பெற்று சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சிவனொளிபாத மலைக்கு நேற்று முன்தினம் (18-03-2023) பக்தர்கள் தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
இதன்போது, தரிசனம் முடித்து விட்டு திரும்பி செல்லும் வேளையில் நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தொதல் பொதி ஒன்று பெற்று சென்றுள்ளனர்.
குறித்த பொதியை நேற்றைய தினம் (19-03-2023) உண்ணுவதற்கு எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் உயிரிழந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்துள்ளனர்.
லட்ச கணக்கான மக்கள் கூடும் சிவனொளிபாத மலை பருவ காலங்களில் இவ்வாறு தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.