ரசிகரின் செயலை கண்டு நெகிழ்ச்சியடைந்து சன்னிலியோன் வெளியிட்ட பதிவு!
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு (Sunny Leone) இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் எராளமாக உள்ளன. திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்த போது திடீரென தொழிலதிபர் டேனியல் வெபர் (Daniel Weber) என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கும் சன்னிலியோன் தம்பதி, வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
குழந்தைகள் பெற்றுக்கொண்ட பின்னர் திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்கத் தொடங்கிவிட்டார். தமிழில் ஓஎம்ஜி என்ற படத்திலும், மலையாளத்தில் ஷீரோ என்ற படத்திலும் நடிக்கும் சன்னி லியோனின் வெப்சீரிஸ் ஒன்றும் அண்மையில் வெளியானது.
மேலும் சமீப காலமாக பட புரோமோஷன் மற்றும் அவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் சன்னிலியோன், ரசிகர் ஒருவரின் செய்கை கண்டு நெகிழ்ந்து போயுள்ளார்.
தனது பெயரை கையில் பச்சைக் குத்திய இளைஞரை பார்த்த சன்னிலியோன், அந்த ரசிகரின் அன்பு தன்னை வியக்க வைப்பதாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
அந்த ரசிகருடன் எடுத்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அவர் என்றென்றும் தன்னை காதலிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ரசிகர் நல்ல மனைவியை தேடி திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவருக்கு அதைத் தவிர இன்னொரு வாய்ப்பு இல்லை என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த காணொளியை சன்னிலியோனின் தாவணிப் பாவாடை ஆடை அலங்காரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.