கனடாவில் குடும்பத்துடன் மகிழும் இலங்கையரையை மணம் முடித்த நடிகை ரம்பா!
பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா, இலங்கையரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரான தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் முடித்து கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் 1990 களில் பல்லரின் கனவு தேவதையாக இருந்தவர் ரம்பா.
சூப்பர் ஸ்டார் முதல் இளையதளபதி விஜய் வரை பல முன்னனி திரைப்படங்களில் நடத்துவந்த ரம்பா திருமணத்தின் பின்னர் கணவர் குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக கடற்கரையில் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.