யாழ்ப்பாணத்தில் நடிகை நமீதா ; சுற்றுலாத்துறையில் முதலீடு
இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி - நமீதா தம்பதிகள், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு வருகை தந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் இன்று(04) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன்,இந்திய திரைப்பட நடிகை நமீதா, இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி- நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.