கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக லொஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்! குவியும் லைக்..
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கை தமிழ்ப் பெண்ணான நடிகை லொஸ்லியா அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3- யில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் பிக்பாஸ் முடிந்ததும் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜூன் மற்றும் லொஸ்லியா நடித்து வெளியான 'பிரண்ட்ஷிப் படம்' திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இலங்கை இளைஞனான தர்ஷன் மற்றும் லொஸ்லியா நடித்த ’கூகுள் குட்டப்பன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நடிகை லொஸ்லியா கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகின்றனர்.