இமயமலை ஏறி சாதனை படைத்தார் நடிகை கயாடு லோஹர்
தென்னிந்திய பிரபலமான நடிகை கயாடு லோஹர், இமயமலைத் தொடரின் 3,700 மீற்றர் உயரமுள்ள சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
தயாரா புக்யால் பகுதியில் அமைந்துள்ள பகாரியா டாப் (Bakaira Top) சிகரத்தை அடைந்த அவர், தனது மலையேற்றப் பயணத்தின் நிழற்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இது தனது முதல் மலையேற்றச் சாதனை எனக் குறிப்பிட்டுள்ள கயாடு லோஹர், இது ஒரு சிறிய தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல சிகரங்களை அடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் எப்போதும் மலைகளை நேசிப்பவர் என்றும், இயற்கையுடன் இருப்பதை மிகவும் விரும்புவதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை கயாடு லோஹர் இந்தச் சாகசப் பயணப் நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன