பிரபல நடிகைக்கு இப்படியொரு நோயா? ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய திரையுலக்கை பொறுத்தவரையில் அண்மைக் காலமாக முன்னணி நடிகைகள் தங்களின் உடல்நலம் தொடர்பில் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நடிகை சமந்தா மற்றும் ஸ்ருதிஹாசன் myositis மற்றும் PCOS தொடர்பில் அதிக விழிப்புணர்வை கொண்டு வந்துள்ளனர்.
தற்போது அவர்களுடன் நடிகை அனுஷ்கா ஷெட்டியும் இணைந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து பிரபலமடைந்தவர்தான் அனுஷ்கா ஷெட்டி. சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் நடிகை அனுஷ்கா. வேட்டைக்காரன், சிங்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட படமான பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றார்.
இதேவேளை, அருந்ததி, பாகமதி, நிசப்தம் போன்று முக்கிய படங்களாக தேர்வு செய்து நடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டியில் தனக்குள்ள அரிய வகை நோய் குறித்து பேசியுள்ளார்.
“எனக்கு சிரிப்பதை நிறுத்த முடியாத நோய் உள்ளது! சிரிப்பது ஒரு பிரச்சனை என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் எனக்கு அது பிரச்சனை தான், ஏனென்றால் நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துக்கொண்டே இருப்பேன்.
நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போதோ அல்லது படமெடுக்கும்போதோ, நான் தரையில் உருளும் அளவிற்கு சிரித்துக்கொண்டே இருப்பேன். அதனால் படப்பிடிப்பு பலமுறை நிறுத்தப்பட்டுள்ளது.” என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி கூறியிருந்தார்.