கையில் தாலியுடன் நின்ற நடிகர் விஜய்; திட்டித் தீர்த்த மனைவி சங்கீதா!
இளைய தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபப்டும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளதுடன், முழுநேர அரசியலில் ஈடுபடுவுள்ளதாக கூறையதுடன் நடிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
நடிகர் விஜய் இன் மனைவி சங்கீதா , யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட புலம்பெயர் லண்டன் வாழ் தமிழர் ஆவார்.
பாக்யராஜ் மகன் சாந்தனு திருமணம்
இந்நிலையில் விஜய் அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டத்தில் இருந்து, பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், விஜய்யை அவரது மனைவி சங்க்கீதா திட்டிய சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனு, தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்தில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டதுடன், அவர்களின் திருமண தாலியை நடிகர் விஜய் தான், சாந்தனுவிற்கு எடுத்துக்கொடுத்திருந்தார்.
சாந்தனுவின் திருமணத்தில் இருந்த அந்த புகைப்படங்கள் கூட அப்போது இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த விஜய்யின் மனைவி சங்கீதா, 'நீங்கள் எப்படி தாலி எடுத்துக்கொடுக்கலாம். அது பெரியவர்கள் செய்யவேண்டிய விஷயம்' என்று கணவரான விஜயை திட்டி தீர்த்துவிட்டாராம்.
அதோடு சம்பவத்தை நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய நிலையில், நடிகை விஜய் மனைவியிடம் திட்டு வாங்கிய சம்பவம் தற்போது மீண்டும் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.