இலங்கைப் பெண்ணை திருமணம் செய்கின்றாரா நடிகர் சிம்பு!
நடிகர் சிம்பு தனது 40வது பிறந்தநாளை கடந்த பிப்ரவரி 3ம் திகதி கோலாகலமாக கொண்டாடினார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கும் இலங்கை தொழிலதிபர் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.
கைக்குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க சிம்பு ஆரம்பித்து விட்டார் . நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளை சிம்பு கொண்டுள்ளார் .
முற்றிலும் வதந்தி
40 வயதாகும் நடிகர் சிம்பு இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தாலும், அவர் தொடர்பில் பல பரபரப்பான கிசுகிசுக்கள் எழுந்தன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சிம்பு இலங்கை தொழிலதிபர் மகளுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரபரப்பான தகவல்கள் பரவின.
சிம்புவுக்கும் இலங்கையை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கை பெண்ணுக்கும் திருமணம் என்கிற செய்தி
முற்றிலும் வதந்தி என்றும் அதனை யாரும் பரப்ப வேண்டாம் என நடிகர் சிம்பு தரப்பு தெரிவித்து பரப்ரப்புக்கு முற்றுப்புள்ள வைத்துள்ளனர்.