பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புகழ் - சிருஷ்டி டாங்க: வைல்ட் கார்ட் என்ட்ரியாக இருக்குமோ!
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாகும், பரபரப்பாகும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 7 சீசனை கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றார்.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸுக்குள் வருவார் என பார்வையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர் மீதான குற்றங்கள் நீருப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், நேற்று எவிக்ஷனில் குறைந்த வாக்குகள் பெற்று போட்டியாளர் ஐஷீ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர்.
இதேவேளை பிக்பாஸ் வீட்டின் 7வது வாரத் தலைவராக தினேஷ் தேர்வாகியுள்ளார். இதனால் இவர் இந்த வாரம் ஏதாவது மாற்றங்கள் செய்வார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.
இது ஒரு புறம் பிக்பாஸ் வீட்டிற்குள் புகழ் மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து இருப்பது சமீபத்திய ப்ரோமோவில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.