சர்வதேச பாடசாலைகளின் மாணவிகளை குறிவைத்து அரங்கேறும் செயல்; விசாரணைகள் தீவிரம்
களுத்துறை மாவட்டத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் கற்கும் மாணவிகளை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் கற்கும் மாணவிகளை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

விசாரணைகள்
குறித்த சர்வதேச பாடசாலைகளில் குழந்தைகள் மீது தகாத செயற்பாடுகள் நடதத்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து, கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள், கொழும்பு மேலதிக நீதிபதியிடம் சம்பவ விவரங்களை அறிக்கையிட்டு, அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவருக்குத் தெரிவித்தனர்.