துப்பாக்கிவுடன் தோட்டா வழங்க நடவடிக்கை; விவசாய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
விவசாயிகளுக்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
பயிர்களை நாசம் செய்கின்ற குரங்கு உள்ளிட்ட விலங்குகளை கலைப்பதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.
இந்த தீர்மானத்தை தேசிய விவசாய ஆணைக்குழுவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாய பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அமைச்சர் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு வெடிமருந்து துப்பாக்கிகள் வழங்குவது தொடர்பில் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் ஒன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
குரங்கு மற்றும் யானைகளின் நடமாட்டம் காரணமாக உழுந்து மற்றும் நெல் மற்றும் மேலும் பல உற்பத்திகள் சேதமாக்கப்படுவதாக சைபயில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே சொட்கண் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.