பிரித்தானியாவில் மாணவர்கள் நலன்கருதி பள்ளிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள பாடசாலைகளில் பிரார்த்தனைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சில செயல்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையிலேயே பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் பிற அனைத்து பள்ளி நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு Wiltshire கவுன்சில் மற்றும் Staffordshire கவுன்டி கவுன்சில் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை டெர்பியில் உள்ள Chellaston அகாடமி மற்றும் Hereford-ல் உள்ள Marlbrook தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பிற தனியார் பள்ளிகள் முன்னெடுத்துள்ளன.
ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்ஸ் மற்றும் எசெக்ஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் Suffolk-ல் உள்ள Thurston சமூகக் கல்லூரி ஆகியவை ஆன்லைனில் கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளன.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக வகுப்பறையை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தலைமை ஆசிரியர்கள் அறிக்கை அளித்துள்ளதாக பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் Geoff Barton எச்சரித்துள்ளார்.