பகிடிவதைக்கு எதிராக அதிரடி திட்டம்
பல்கலைகழகங்களில் புதிய மாணவர் பகடிவதைக்கு உட்படுத்துதல் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக ஆலோசனை பிரிவுகளை வலுப்படுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் இணைக்கப்பட்டு, இது தொடர்பாக பணியாற்ற ஒரு உறுப்பினர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரின் மரணம் குறித்து முறையான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும், பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகமும் இந்த மரணம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளன.