இலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள்; அமைச்சரவை கலைப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மகிந்த ராஜபக்ச விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துடன் அதற்கான கடிதத்தை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு சற்றுமுன்னர் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி விஷ்வரூபம் எடுத்து அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது பெரும் மக்கள் போராட்டமாக வெடித்திருந்தது.
அழுத்தங்களுக்கு பயந்து தான் பதவி விலகப் போவதில்லை என இதற்கு முன்னர் மகிந்த அறிவித்திருந்த நிலையில், உட்கட்சி மோதல்கள் அதிகரித்திருந்தன.
இன்றைய தினம் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் மகிந்தவிற்கு ஆதரவானவர்களால் கலவரங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் அது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனயடுத்தே மகிந்த இராஜினாமா க்செய்வதாக அறிவித்த நிலையில் தற்போது அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.