பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்ட நடவடிக்கை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டு, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்தவொரு நபரும் 1958 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு வழங்கலாம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரச்சினை தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும், இவ்வாறான தவறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநர்களும் பரிசோதகர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.