தாம் ஆளும் கட்சி என மறந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறிவந்தவர்கள் தாம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்பதை மறந்த உறுப்பினர்களா பேசுகின்றார்களா என்ற ஒரு சந்தேகம் காணப்படுவாதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் உறுவாக்கிய அரசாங்கம் தற்போது மக்களுடைய எதிர்பார்ப்புக்களை தளர்த்தி வருகின்றது என்ற அடைப்படையில் இன்று நடந்த பாரளுமன்ற விவாதத்திலே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த ஆளும் தறப்பிலிருந்து பல உறுப்பினர்கள் பேசுகின்றார்கள் பல விடயங்கள் சொல்லப்படுகின்ற பலர்களினால் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். System Change என்று சொல்லி கொண்டு வந்தவர்கள் நீங்கள் தயவு செய்து பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு அந்த மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.
பழைய அரசியல் வாதிகளையும் பழைய அரசாங்கத்தையும் திட்டுவதையும் விட்டு விட்டு என்னென்ன புதிய விடயங்களை அமுல் படுத்தப்படுகின்றீங்கள் எவ்வாறான புதிய மாற்றத்தை கொண்டு வர போகின்றீர்கள் என்பதை தெளிவுப்படுத்துங்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறிய பல விடயங்களை இந்த காணொளி மூலம் காணலாம்...