புதிய கொரோனா வைரஸ் உங்களை தாக்கக்கூடாதா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. தற்போது இந்த கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு அடைந்து, சீனாவில் பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த புதிய மாறுபாடு தான் BF.7. கோவிட்-ன் இந்த புதிய மாறுபாடு சீனாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் நுரையீரலை முதலில் தாக்கக்கூடியது. அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே நுரையீரலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க , முதலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும்.
வலுவான நோயெதிர்ப்பு சக்தியால் மட்டுமே கொரோனா வைரஸில் இருந்து நம் உயிரை பாதுகாக்க முடியும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன. எனவே நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் சில உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
கீழே அந்த உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- நோயெர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டுமானால் வைட்டமின் சி உணவுகளை உண்ண வேண்டும். இந்த வைட்டமின் சி ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. இவ்விரண்டுமே ஸ்நாக்ஸ்களாக சாப்பிட ஏற்றவை. குறிப்பாக நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது அவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் குடிக்கலாம்.
- நமது சமையலறையில் உள்ள பல மசாலா பொருட்கள் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. எனவே மசாலா பொருட்களான கிராம்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகு, பட்டை போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். ஏனெனில் இந்த மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது. அதற்கு மசாலா பொருட்களை சமையலில் சேர்ப்பதைத் தவிர, அவற்றைக் கொண்டு கசாயம் தயாரித்தும் குடிக்கலாம்.
- ப்ராக்கோலி மிகவும் சுவையான காய்கறி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது தவிர, ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
- வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி, நுரையீரலுக்கும் நல்லது. அதுவும் வெந்தயத்தை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், நுரையீரல் தொற்றுக்களின் அபாயம் குறையும் மற்றும் நுரையீரலில் தேங்கியுள்ள சளியும் கரைந்து வெளியேற்றப்படும். அதற்கு வெந்தயத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது அவற்றைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.
- ஓம விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே ஓமத்தைக் கொண்டு கசாயம் தயாரித்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வலுவாகும். ஓம கசாயம் தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது ஓம விதைகள், துளசி இலைகள், மிளகு மற்றும் ஒரு பல் பூண்டு ஆகியவற்றை தட்டிப் போட்டு, சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. ஆகவே நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக விரும்பினால், பாதாம், முந்திரி, வால் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை ஸ்நாக்ஸ்களாக சாப்பிடுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாவதோடு, உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். இது தவிர, இது நுரையீரல் தொடர்பான நோய்களில் இருந்தும் பாதுகாப்பளிக்கும்.