பளு தூக்கும் போது ஏற்பட்ட விபத்து ; நபர் பலி
இந்தோனேசியாவின் பாலி நகரைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஒருவர் பளு தூக்கும் போது ஏற்பட்ட விபத்தில் கழுத்து முறிந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
33 வயதுடைய ஜெஸ்டின் விக்கி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஜெஸ்டின் பிரபலமான நபராக இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி ஜெஸ்டின் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.
பளு தூக்கும் போது பார்பெல்லை (barbell) கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென பார்பெல் ஜெஸ்டின் கழுத்தில் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதிக எடை கொண்ட பார்பெல் கழுத்தில் விழுந்ததில் ஜெஸ்டினின் கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.