மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி விபத்து
அத்துருகிரிய பிரதேசத்தில் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் ஏற்றப்பட்ட லொறி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதனை நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தினால் மசகு எண்ணெய் அடங்கிய பிளாஸ்ரிக் கலன்கள் வீதியில் வீழந்து காணப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறி அதிவேக நெடுஞசாலையின் கடவத்தை நுழைவாயிலில் இருந்து உள்ளே நுழைந்து பின்னர் பண்டாரகம களனிகம நுழைவாயிலிலிருந்து வெளியேறும்போது இடதுபுற ரயரில் காற்று போனதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.