களுத்துறை வாகன விபத்தில் ஒருவர் பலி ; மக்களால் தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
களுத்துறை புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் வாகன விபத்து காரணமாக நேற்று (2024.04.05) இரவு அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் புலத்சிங்கள ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதியுள்ளார்.
குறித்த நபர் வீதி மாறிய போது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
பொலிசார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.