யாழில் ரயிலுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து; தந்தை பலி மகள் படுகாயம்
யாழ்ப்பாணம், அரியாலை பூங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தந்தை வீடு நோக்கி பயணித்துள்ளார்.

பாடசாலையில் இருந்து மகளை அழைத்து வந்த தந்தை
இதன்போது பூங்கன்குளம் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த அவரது மகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.