யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற விபத்து; 6 பேர் மருத்துவமனையில்!
யாழ்ப்பாணம் வடமராட்சி - மந்திகைக்கும் மாலி சந்திக்கும் அண்மித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாபாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்த போதே முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இதே வேளை கொடிகாம் பருத்தித்துறை வீதியில் இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.