கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்து; உயிரிழந்த தமிழ் வர்த்தகர்
கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்துடன் அவரின் மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வர்த்தக நிலையத்துக்கு மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குறித்த வர்த்தகர் பயணித்துள்ளார்.
உயிரிழந்த நபர்
இதன்போது எதிரே வந்த ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்தோடு அவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்தவரும் இரத்மலானையில் வசிப்பவருமான பாரதிராஜா முகுந்தன் (வயது 44) என்ற வர்த்தகரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.