மட்டக்களப்பில் பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்!
மட்டக்களப்பில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மட்டகளப்பிலிருந்து முகத்துவாரம் செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்துள்ளதாக செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.