பதுளையில் இடம்பெற்ற விபத்து ; நபர் பலி
பதுளை - ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்து இன்று அதிகாலை நேர்ந்த இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்களும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் தெரிய வந்தவை
சம்பவத்தில் எல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதான மகிழுந்து சாரதியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து வீதி அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.