விபத்தில் ஒருவர் பலி; கைதான சந்தேகநபருக்கு நெஞ்சுவலி
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 45 வயதுடைய ஆணொருவர் பலியாகியுள்ளார்.
பொலிஸாரல் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக கராப்பிட்டிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் உயிரிழப்பு
நேற்றையதினம் கராபிட்டிய பெலிகஹ திசையை நோக்கி மோட்டார் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவர் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுவரொன்றின் மீது மோதியுள்ளது.
அத்துடன், அப்பகுதியில் எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீதும் மோதியுள்ளார். இந்த வாகன விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.