பிரபல பாலிவுட் நடிகர் மகளுக்கு தடல்புடலாக இடம்பெற்ற நிச்சயதார்த்தம்!(Photos)
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகளுக்கு நேற்று தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
58 வயதாகும் நடிகர் அமீர் கான், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், டிவி பிரபலம், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.
1973களில் துவங்கி தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். பல திறமைகளைக் கொண்ட நடிகர் அமீர்கான் 1986ம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அமீர் கானின் மகள் இரா கானுக்கு மும்பையில் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா, நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன், இந்த திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
திருமண நிச்சயதார்த்த விழாவில் இரா கான் ஒரு அழகான சிவப்பு கவுன் அணிந்து கொண்டு ரோஜா போல காணப்பட்டார்.
நிச்சயதார்த்த விழாவில் இராவின் தந்தை அமீர்கான், தாய் ரீனா தத்தா, கிரண் ராவ், அமீர்கானின் மருமகன் இம்ரான் கான் மற்றும் பாட்டி ஜீனத் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.