தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞன் ; இறுதியில் நேர்ந்த விபரீதம்
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர - அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், இன்று (19) அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது அவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.