சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த இளைஞன்
22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைதுசெய்யப்பட்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் அநுராதபுரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.