கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் திடீர் மரணம்
கொழும்பு கொஸ்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையாகியிருந்தவர் என்றும், நேற்று (02) பிற்பகல் போதைப்பொருள் சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலின் விளைவாகவே அந்த இளைஞர் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
எனினும், சந்தேக நபர் திடீர் சுகவீனம் காரணமாக காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.