யாசகர் ஒருவர் அதிரடியாக கைது
ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய சகோதரி வீட்டில் பெருமளவு பணமும் கைபற்றப்பட்டுள்ளது.
நேற்று (26) கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் , பெருமளவு பணம்
இதன்போது அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, சம்பந்தப்பட்ட நபரிடம் ஐஸ் போதைப்பொருளையும் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர், சந்தேக நபரின் சகோதரி ஒருவரிடம் வீட்டில் உள்ள பெருமளவு பணம் குறித்து கேட்டபோது, யாசகம் எடுத்து சம்பாதித்த பணம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.