ஆடையில் மறைத்து சிறைச்சாலைக்கு போதைபொருள் கொண்டு வந்த பெண்ணொருவர் கைது
கண்டி தும்பர போகம்பர சிறைச்சாலையில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை பார்ப்பதற்காக வந்த பெண்ணொருவர் 2080 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கு தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபருக்கு வழங்குவதற்காக பெண்ணொருவரினால் ஆடையில் மறைத்துக் கொண்டு வரப்பட்டுள்ள 2080 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய பெண் கெங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இப்பெண் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் பல வழக்குகள் அவர் மீது இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி பெண் மேலதிக விசாரணைகளுக்காகப் பல்லேகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.