கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக பெண் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வைத்திருந்த பொதியை (சூட்கேஸ்) திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை களுபோவில பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜசின் நவாஷ் என்ற 34 வயதுடைய இரத்தினக்கல் வர்த்தகரின் பயணப்பொதியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
இந்த "Brand Tumi" சூட்கேஸ் மாத்திரம் சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியானதுடன், இந்த தொழிலதிபருக்கு சொந்தமான இரத்தினக்கற்கள், காலி இரத்தின பொதி பெட்டிகள், தொழிலதிபரின் ஆடைகள் மற்றும் பல பெறுமதியான பொருட்கள் அடங்கிய ஆவணங்கள் இருந்தன.
இவர் கடந்த 28ஆம் திகதி அதிகாலை 03.00 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸின் KR-632 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஹெம்மாத்தகம பெதிகம்மன பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய வீட்டுப் பணிப்பெண் இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவரைத் தேடிய விமான நிலையப் பொலிஸார் அவரது வீட்டில் இருந்து 125,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.