பிரதேச செயலக அதிகாரி மீது பெண்ணொருவர் தாக்குதல்!
திருகோணமலை - புல்மோட்டை பதவி ஸ்ரீபுர, பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரைத் தாக்கியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக காணியைக் கையகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணமாக அதிகாரி மீது தாக்குதல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத காணி பிடிப்பு
அதோடு அதிகாரியிடமிருந்து ஆவணங்களை பலவந்தமாக பெற்றுக்கொள்ள அந்த பெண் முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி சிகிச்சைக்காகப் பதவி ஸ்ரீபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அதிகாரி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து பிரதேச செயலகத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று காலை (27) அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.