உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான ஒரு எச்சரிக்கை பதிவு!
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பூசணி விதைகளும் இரத்த அழுத்தத்தை சீர் செய்ய உதவும் முக்கிய கூறாகும்.
இரத்த அழுத்தத்தைக் குறைப்பது என்பது வாழ்நாள் பொறுப்பு. வாழ்க்கை முறையை மாற்றினால், உயர் இரத்த அழுத்தத்தைப் போக்க முடியும். நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் விலகி இருக்க வேண்டிய 8 வெவ்வேறு உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உப்பு: (salt)
உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வரும்போது, உப்பு மிக அபாயமான ஒரு பொருளாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் உணவில் சோடியம் உள்ளடக்கத்தை நீங்கள் அதிகரிக்கும்போது, உங்கள் உடலின் அயனி சமநிலையை நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
இது பொதுவாக மிகவும் மோசமான நிலையில் உங்களை கொண்டு சேர்த்துவிடும். எனவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் சோடியம் உட்கொள்ளலை 1,500 மி.கிராமுக்கு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil):
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒரு வகை கொழுப்பைக் கொண்டுள்ளன. இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சுத்தமாகவும் தெளிவாகவும் தோற்றமளிக்கின்றன. உண்மை என்னவென்றால், இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களும் வெண்ணெய்யும் ஒமேகா -6 கொழுப்பு வகையால் நிரம்பியவை. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஊறுகாய்: (pickle)
பெரும்பாலான நிலைகளில், நீங்கள் எதையும் கெடாமல் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது, அதில் உப்புதான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த வகையில் ஊறுகாய்களிலும் உப்புதான் அதிகம். ஊறுகாயில் சேர்க்கப்படும் காய்கறிகள் கெடாமல் புதியதாக இருக்க உப்பை அதிகம் சேர்க்கிறோம்.
ஆனால் மோசமான பகுதி என்னவென்றால், அவை பெரும்பாலும் ஏராளமான எண்ணெய் அல்லது வினிகரில் தோய்த்து வைக்கப்படுகின்றன. இதனால் அவை நொதித்து, சுவையை பராமரித்து கெடாமல் வைத்திருக்கும். ஆகவே, ஊறுகாய் இரத்த அழுத்தத்திற்கு தீங்கை விளைவிக்கும்.
பாலாடைக்கட்டி (Cheese):
பாலாடைக்கட்டி உணவில் சேர்க்கையில் சுவையை மேம்படுத்தும். ஆனால், லேக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பாலாடைக்கட்டி அபாயம் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பொதுவாகவே பாலாடைக்கட்டி அதிகமாக உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் புரதம் போன்ற சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
இருப்பினும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் காணும் பாலாடைக்கட்டி வகைகள் உப்பு நிரம்பியவை. இது உங்கள் இரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. நீங்கள் அதிக பாலாடைக்கட்டி சாப்பிடும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அதன் விளைவாக, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
மது அருந்துவது கேடு: (Liquor drinking is injurious to health)
நீங்கள் மருப்பிரியராக இருந்தால், மது குடிப்பதால் ஒரு ஆரோக்கிய நன்மை கூட இல்லை என்பதை அறிந்து அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் அதிகமாக மது அருந்தும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
காஃபி: (Coffee)
காலையில் பருக காஃபி ஒரு சிறந்த பானமாகும். அதில் நன்மைகளும் உள்ளன. இருப்பினும், நீங்கள் அதிக அளவு காஃபியை குடிக்கும்போது, உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏற்றம் காணப்படும். எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காஃபியை தவிர்ப்பது நல்லது.
கார்பனேற்றப்பட்ட பானங்கள் (Carbonated drinks):
கார்பனேற்றப்பட்ட பானங்கள் ஆரோக்கியமற்றவை மற்றும் உடலுக்கு நிறைய தேவையற்ற சர்க்கரைகளை புகுத்துவதால், அவை உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்க்கும்போது, உங்கள் வாயின் ஆரோக்கியத்தையும் அழிக்க துணை போகிறீர்கள் என்பது நிதர்சனம். கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கும்போது ஆரோக்கியம் மேம்படுகிறது.