இன்று நள்ளிரவுடன் தடை; இறுதிப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மும்மரம்
இலங்கையில் இன்று நள்ளிரவுடன் பிரச்சார கூட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று (18) நடைபெறவுள்ளன.
பிரதான பேரணிகள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் இறுதிப் பொதுக்கூட்டம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நடைபெறவுள்ளது.
SJB கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் இறுதி பொதுக்கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.
அதேபோல NPPயின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கும் இறுதி பொதுக்கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது.