வெறும் இரண்டே மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டுபிடிக்கும் கருவி; இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்
வெறும் 2 மணிநேரத்தில் ஒமைக்ரானை கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கால்பதித்த உடனே அசாம் மாநிலம் டிப்ருகருல் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனா அதிவிரைவாக கண்டறியும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதன்மூலம் 1000-கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் சாம்பிள்களை பரிசோதித்ததில் 2 மணிநேரத்தில் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கொல்கத்தாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த கருவி அடுத்த வாரம் முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை வசதி உள்ள ஆய்வகங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை கொரோனா அச்சுறுத்தலால் விமான நிலையங்களில் பரிசோதனை முடிவுகளுக்காக வெகுநேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு இது ஒரு நல்ல நிவாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.